Srilanka GK போட்டி பரீட்சை வினாக்கள் GK-1
1.இலங்கையின் வரலாறு பற்றி அறியக்கூடிய மூலதாரங்கள் யாவை.?
2.இலங்கையை பற்றி அரிஸ்டோட்டில் எழுதிய நூலின் பெயர் என்ன.?
3.ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றுவதற்கு தந்திரோபாயமாக செயற்பட்டதன்மூலம் பங்களிப்பு வழங்கியதாக கருதப்படுபவர் யார் ?
4.இலங்கை வரலாற்றில் பொதுச்சேவை ஆணைக்குழு எப்போது முதன் முதல் உருவாக்கப்பட்டது ?
5.அனுராதபுரத்தை ஆண்ட முதல் ஆட்சியாளன் யார்?
6. நகரகுத்திகன் என்ற பதவி யாருடைய ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.?
7.சத்திரியர்களின் முடிசூட்டு விழா வைபவம் யாருடைய காலத்தில் நடைபெற்றது?
8.உலகிலுள்ள உயரமான 14 மலைச்சிகரங்களில் இமயமலையில் உள்ள சிகரங்களின் எண்ணிக்கை யாது?.
9.சுயாட்சி அரசியலமைப்புக்கு பெயர் பெற்ற நாடு எது ?
10.மாவட்ட செயலாளரிடம் இருந்த சில அதிகாரங்களை பிரதேச செயலாளர்களுக்கு கையளித்த சட்டம் எது?.
11.இரண்டாம் உலக மகா யுத்தகாலப்பகுதியில் கொழும்பு ,திருகோணமலை ஆகிய நகரங்களின் மீது விமானத்தாக்குதல் நடத்திய நாடு எது ?
12.எழுத்தறிவு இல்லாதோர் பிறக்காமல் இருந்திருக்கலாம்" என்ற பிரபல கூற்றைக் கூறியவர் யார் ?
13.2019 ஆம் ஆண்டின் உலக விஞ்ஞான தினத்தின் கருப்பொருள் என்ன ?
14.இலங்கை தேர்தல் திணைக்களத்தின் முதலாவது தேர்தல்கள் ஆணையாளர் யார் ?
15.அரசாங்க அதிபர் (Government Agent )என்ற பதவிநிலைப் பெயர் மாவட்டச் செயலாளராகவும் உதவி அரசாங்க அதிபர்(AGA) பிரதேச செயலாளராகவும்(Divisional Secretary) பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது ?
16.உலகப்பயங்கரவாதம் தொடர்பில் உலக அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் இலங்கையைச்சேர்ந்த பிரபல பேராசிரியர் யார் ?
17.சட்டக்கல்விச்சபையின் உத்தியோகபூர்வ தவிசாளர் யார் ?
18.பாராளுமன்றத் தேர்தல் ஓன்று நாட்டில் நடைபெறும் வேளையில் 25 நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச்செயலாளர்கள் தேர்தல் கடமையின்போது தேர்தல் காலத்தில் அவர்களது பதவி நிலை எப் பெயர் கொண்டு அழைக்கப்படும் ?
19.இலங்கையில் நில அளவையாளர் தினமாக எந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ?
20. Common wealth இல் உறுப்பினராகவுள்ள பிரித்தானியாவின் காலணித்துவத்திற்கு உட்படாத நாடுகள் இரண்டு தருக?

