அரச மரபினர் பயன்படுத்திய நாணயங்கள்
தமிழகத்தில் பல்வேறு அரச மரபினர்கள் பயன்படுத்திய நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்டன. அவ்வகை நாணயங்கள் அக்கம், மாடை, கழஞ்சு, அன்றாடு நற்காசு, கருங்காசு, ஈழக்காசு என அழைக்கப்பட்டன.
தமிழ் இலக்கியங்களில்
தமிழக மன்னர்கள் புலவர்களையும், பாணர்களையும் ஆதரித்தனர் என இலக்கியங்கள் வாயிலாகவும், ஆற்றுப்படை நூல்கள் வாயிலாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறு புலவர்களும், பாணர்களும் அரசனை வாழ்த்திக் கூறும்போது அவர்களுக்கு மன்னர்களால் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள்களுடன் பொற்காசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
சங்க காலம்
காசுகள் சங்க காலம் தொடங்கி பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களில் காணப்பட்டு வந்துள்ளன. சங்க கால அரசர் காலத்தில் வெளியிட்ட காசுகள் புலி, யானை முதலிய உருவங்களுடன் காணப்பட்டன.
இந்நாணயங்களில் கழஞ்சு என்பது சங்க காலத்தில் எடுத்தலளவையாகப் பயன்படுத்தப்பட்டன. சங்க கால அரசர் காலத்தில்வெளியிட்ட காசுகள் புலி, யானை முதலிய உருவங்களுடன் காணப்பட்டன. பிற்காலத்தில் நாணயங்கள் அளவான கழஞ்சு பயன்படுத்தப்பட்டுள்ளதை கல்வெட்டினால் அறியலாம்.
சங்க காலத்தில் ரோம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான வியாபாரம் நடைபெற்றதற்குச்சான்றாக ரோமானியக் காசுகள் தமிழகத்தில் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் கிடைத்த காசுகளில் திண்ணன், எதிரான் சேந்தன் என்ற பிராமி எழுத்துக்களோடு கிடைத்துள்ளன. இது திண்ணன், சேந்தன் என்ற சங்க காலப் பெயர்களைத் தாங்கியுள்ளன. சேந்தன் என்பவர் பற்றி அகநானூற்றுப் பாடலில் அறியமுடிகிறது
