Type Here to Get Search Results !

இலங்கை பற்றிய பொதுவான தகவல்கள்

வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளைக் கவர்ந்த ஒரு நாடாகும். இலங்கை 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவாகும். 

இந்தியாவின் தென்முனைப்பகுதியில் இது அமைந்துள்ளது., இதன் சிறப்பான அமைவிடமானது பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் இலங்கையை மிகவும் பிரபலமான ஒரு இடமாக ஆக்கியுள்ளது.வளைகுடாப் பிராந்தியத்தின் எல்லாப் பிரதான நகரங்களில் இருந்தும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும் இலங்கைக்கான விமானப் பயண நேரம் மூன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தகப் பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது.

நாட்டின் தென்பகுதி பொன்நிறமான கடற்கரையையும், மத்திய பகுதி பனிபடர்ந்த மலைகளையும் கொண்டுள்ளது. இவை தவிர சிதைந்து போன கலாசார முக்கோணங்கள், கன்னிமலைக்காடுகள், பசுமையான புல்வெளிகளும், வயல்வெளிகளும் இலங்கையின் அழகுக்கும், எழிலுக்கும் மெருகு சேர்ப்பதோடு இந்த மிதமிஞ்சிய எழில் கொஞ்சும் இயற்கை அழகுகள் காரணமாக உண்மையிலேயே ஒரு சொர்க்கபுரித்தீவாக இலங்கை உலகில் இடம்பிடித்துள்ளது.

ஓய்வுக்காக இலங்கைக்கு விஜயம் செய்கின்றவர்களுக்கு இலங்கை மக்களின் விருந்தோம்பல் உண்டையிலேயே அவர்களின் பயணத்தைப் பெறுமதிமிக்கதாக்குகின்றது.வர்த்தகப் பயணிகளுக்கு செறிவான கைத்தொழில் பிரிவுகளும், சிறிய கைத்தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஆற்றல் மிக்க வர்த்தகத் தொடர்புடன் கூடிய கல்வியறிவு மிக்க மக்களும் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாகும்.


தொழில் பயிற்சி ஆற்றல் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை ஏன் இலங்கையிலிருந்து தெரிவு செய்ய வேண்டும்?

பாரம்பரிய தொழில் ஆற்றல்

ஸ்தூபிகள்,கோபுரங்கள்,மடாலயங்கள்,மாளிகைகள்,நீர்பாசனத்திட்டங்கள் (குளங்கள்) என்பனவற்றின் சிதைவுகள் பண்டைய இலங்கையின் பொறியியல் தொழில் ஆற்றல்,செழுமையான வளங்கள் மற்றும் சாமர்த்தியம் என்பனவற்றுக்குச் சான்றாக அமைந்துள்ளன.இந்தத் தொழில் ஆற்றலாானது தலைமுறை தலைமுறையாகக் கடந்துவந்து ,தற்போது மேலதிக நவீன தொழில் நுட்பத்தால் பட்டைதீட்டப்பட்டுள்ளது.



உயர் எழுத்தறிவு மட்டம்

இலங்கையில் இரண்டாம் (ஆண்டு13) மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி மட்டத்தோடு ஆற்றலும்,பயிற்சியும் கொண்ட மனிதவலுவுடன் கூடிய பாரிய அளவிலான வெளியீடுகள் உள்ளன. நூற்றுக்கணக்கான ஏ தரம் கொண்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வலைப்பின்னலூடாக உயர்மட்டக் கல்வி பேணப்படுகின்றது. இங்கு எழுத்தறிவு வீதம் 92 ஆக இருப்பது ஆசியாவில் மிகவும் உயர்மட்டத்தில் ஒன்றாகும்.


விரைவாகப் படிப்பதகான இயல்பூக்கம் மற்றும் இலகுவாக இசைவாக்கம் பெறல்         

இலங்கையர்கள் இயல்பாகவே விவேகமானவர்கள் தொழில்தன்மையுடையவர்கள்,கடின உழைப்பாளிகள் மற்றும் புதிய தொழில்களில் தம்மை இயல்பாகவே இசைவாக்கிக் கொள்ளக் கூடியவர்கள்,எந்தத் தொழில் தேவையையும் இலகுவாகவும்,விரைவாகவும் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.இவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களைத் திருப்திப்படுத்துகின்றன.சிறந்த விருந்தோம்பல் மற்றும் ,இயல்பான பெருந்தன்மை என்பன இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாடுகளில் தொழில் செய்யும்  இடங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலைமைகளுக்கும் விரைவாகவே பரிச்சயமடைய செய்கின்றன.அவர்கள் தொழில் திருப்தியை இலகுவாகப் பெற்றுக் கொள்கின்றனர்.அத்தோடு மகிழ்ச்சியும் அடைகின்றனர்.இவை வெற்றிகரமான தொழில் தருனர் மற்றும் தொழிலாளி உறவுகளுக்கு மிகவும் அவசியமானவை.இலங்கையர்கள் உறுதியான குடும்பத் தொடர்புகளையும் பேணிவருவதால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்பே வீடு திரும்ப ஆர்வம் கொண்டுள்ளனர்.

இலங்கை பற்றிய பொதுவான தகவல்கள்

இலங்கையின் மறுபெயர்கள்
1.ஆரியர்-தம்பபன்னி
2.கிரேக்கர்-தப்பிரபேன்
3.இந்தியர்-சீலயி
4.அராபியர்-செரண்டிப்
5.சீனர்-சீலன்
6.போர்த்துக்கீசர்-செயிலான்/செயிலாவோ
7.ஒல்லாந்தர்-சிலான்
8.ஆங்கிலேயர்-சிலோன்

இலங்கையின் தேசிய உடை

1.ஆண்கள் - நீளக்கை சட்டையும் , வேட்டி அல்லது சாரம்.

2.பெண்கள் -ஒசரி சேலையும் ,ரவிக்கையும்.

3.சிறுமிகள் -லமாசாரி (மடிப்புடய ரவிக்கை)


இலங்கை குடியரசாக்கப்பட்டது :1972.05.22
தலைநகரம் : ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே

 வர்த்தகத் தலைநகரம் : கொழும்பு

 நாணயம் :இலங்கை ரூபா

அரசாங்கம் :

சட்டவாக்க அதிகாரம் பாரளுமன்றத்துக் குரியது.விகிதாசாரதேர்தல் முறையிலான மக்கள் வாக்களிப்பின் மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்படுகின்றது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் மக்கள் வாக்கெடுப்பின் மூலமே தெரிவு செய்யப்படுகின்றார். பாதுகாப்புத்துறை உட்பட்ட நிறைவேற்று அதிகாரம் இவரிடம் உள்ளது.பல கட்சிமுறையைக் கொண்ட இலங்கையில் அரசாங்கம் ஆறுவருடங்களுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படுகின்றது.



தேசியக் கொடி:

இலங்கையின்  தேசியக் கொடி வலது பாதத்தில் வாள் உடன் கூடிய பொன்நிறத்தினாலான சிங்கத்தின் உருவத்துடன் ,சிவப்பு நிற வர்ணப் பின்னணி,மஞ்சள் நிற கரை என்பனவற்றைக் கொண்டது.இதன் நான்கு முனைகளிலும் உள்நோக்கிச் சாய்ந்ததாக நான்கு அரச மர இலைகள் உள்ளன. நாட்டின் சிறுபான்மை இனக் குழுக்களைப் பிரதிபலிக்கும் வகையில் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தினாலான செங்குத்தான வாட்டிகள் கொடியின் முடிவில் காணப்படுகின்றன.இலங்கையின் கடைசி மன்னனின் நிலைப்பாட்டைத் தழுவியதாக இது அமைந்துள்ளது.

இலங்கையின் தேசியக் கொடி

1948 பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கை சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பிருந்தே அதன் தேசியக் கொடிக்கான தேவை குறித்து கலந்துரையாடப்பட்டு வந்துள்ளது. மட்டக்களப்புக்கான பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ஏ.சின்னலெப்பை அவர்கள் 1815 இல் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க அரசின் சிங்கக் கொடியை தேசியக் கொடியாக பிரகடனப்படுத்துமாறு 1948 ஜனவரி 16 ஆந் திகதியன்று அரச பேரவையில் தனது எண்ணத்தை முன்வைத்தார். இவ்விடயம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அதன்பின்பு பிரதம மந்திரி கௌரவ டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள், திரு.எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க (தலைவர்), சேர் ஜோன் கொத்தாலாவல, திரு.ஜே.ஆர்.ஜயவர்தன, திரு.டி.பி.ஜயா, கலாநிதி.எல்.ஏ.ராஜபக்ஷ, திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் செனட்டர் எஸ்.நடேசன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவொன்றைப் நியமித்தார்.

1948 பெப்ரவரி 04 ஆந் திகதி இலங்கை அதன் முதலாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய வேளையில் தேசியக் கொடி உருவாக்கத்திற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு இறுதி முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும், அன்றைய தினம் சிங்கக்கொடி ஏற்றப்பட்டது. 1948 பெப்ரவரி 19ஆந் திகதி சுதந்திர இலங்கையின் (அப்போதைய சிலோன்) முதலாவது பாராளுமன்ற தொடக்க நிகழ்வில் சிங்கக்கொடி மற்றும் பிரிட்டனின் கொடி ஆகியன ஏற்றப்பட்டன. 1948 பெப்ரவரி 12 ஆந் திகதி கண்டியில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பிரதம மந்திரி டி.எஸ்.சேனாநாயக்க அவர்களினால் பட்டிருப்புவவில் சிங்கக்கொடி பெருமையுடன் ஏற்றப்பட்டது.

விசேடக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தேசியக் கொடி 1951 மார்ச் 02 ஆந் திகதி திரு.டி.எஸ். சேனாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் பச்சை நிறம் முஸ்லீம் மக்களையும், செம்மஞ்சள் நிறம் தமிழ் மக்களையும் குறிப்பதாக இருபட்டைகள் காணப்பட்டன. இக்கோடுகள் ஒவ்வொன்றும் தேசியக்கொடி அளவின் ஏழில் ஒன்றுக்கு சமனாகும் வகையில் அமைந்திருந்தது.

1972 இல் இலங்கையானது முதல்முறையாக குடியரசாக உருவாக்கப்பட்ட போது, இயற்கையான அரச இலைகளை ஒத்திருப்பதாக பராம்பரிய அரச இலைகள் சேர்க்கப்பட்டு தேசியக்கொடியில் மாற்றம் செய்யப்பட்டது. மாற்றம் செய்யப்பட்ட இந்த தேசியக்கொடியானது 1972 மே மாதம் 22 ஆந் திகதி குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது முதல்முறையாக ஏற்றப்பட்டது. 1978 செப்டெம்பர் 09 ஆந் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 6 ஆவது பிரிவின் இரண்டாவது அட்டவணையில் இத் தேசியக்கொடி இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட அரச இலைகளைத் தவிர்ந்த தேசியக் கொடியினையே, 1951 மார்ச் 02 ஆந் திகதி தேசியக்கொடி உருவாக்கத்திற்கான குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது

இலங்கையின் தேசியச் சின்னம்

இலங்கையானது பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இருந்த காலக்கட்டத்தில் பிரித்தானிய சின்னத்தை பயன்படுத்தியதோடு, 1948 சுதந்திரமடைந்த பின்னரும் கூட அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தது. இலங்கைக்கு (சிலோன்) மிகவும் பொருத்தமான அரச சின்னமொன்றினை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் சிபாரிசுகளுக்கமைய, அவர்கள் புதிய அரசச் சின்னமொன்றினை உருவாக்குவதில் செயற்பட்டு வந்தனர். மேலாக ‘பலப்பெத்தி’ வடிவமைப்புடன் வலது கையில் வாளொன்றினைப் பிடித்தவாறான சிங்கமொன்று இலங்கையின் அரசச் சின்னமாக உருவாக்கப்பட்டது. அதன் கீழ் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நாட்டின் பெயர் பொறிக்கப்பட்ட பட்டை காணப்பட்டது.

1972 மே 22 ஆந் திகதி குடியரசாக நாடு பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து இப் புதிய குடியரசுச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாளுடன் கூடிய சிங்கம் மற்றும் ‘பலப்பெத்தி’ வடிவமைப்பு ஆகியவற்றுக்கு மேலதிகமாக அதில் பூரணக்கலசம், தர்மச்சக்கரம், சூரியன், சந்திரன் மற்றும் இரு நெற்கதிர்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டன.

இலங்கையின் தேசிய மலர்



1986 பெப்ரவரி 26 ஆந் திகதி இலங்கையின் தேசிய மலராக நீல அல்லி மலர் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் தாவரவியல் பெயர் ‘நைஃபி ஸ்டெல்லட்டா’ ஆகும். பெரும்பாலான சிங்கள, பாலி மற்றும் சமஸ்கிரத இலக்கியத்தில் இம்மலர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ‘குவளய’, ‘இந்தீவர’, ‘நிலுப்பல’ ‘நீலோற்பலா’ மற்றும் ‘நிலுபுல்’ என அறியப்படும் இம்மலர் பௌத்த இலக்கியத்திலும் சிறப்பான இடத்தினைப் பெற்றுள்ளது. சித்தார்த்த இளவரசரின் பாதச்சுவடுகளில் இருந்ததாக கருதப்படும் 108 வடிவமைப்புகளில் இந்த ‘நீல அல்லி மலர்’ உம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே இம்மலரானது வரலாற்றில் விசேடத்துக்குரிய மலராக இருந்துள்ளமையை சான்று பகர்வதாக இதுவமைந்துள்ளது. சிகிரியாவின் சுவர் ஓவியங்களிலுள்ள கன்னிப் பெண்களின் கைகளிலும் நீல அல்லி மலரே காணப்படுவதாக நம்பப்படுகிறது. பாரம்பரிய கவிதையாக அறியப்படும் ‘சந்தேஷ காவ்ய’ விலும் பெண்களின் கண்களை நீல அல்லி மலருக்கு ஒப்பானதாக சித்திரிக்கப்பட்டுள்ளதுடன், காதணிகளாகவும் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிக ஆழமற்ற நீரில் வளரக்கூடிய நீல அல்லி மலரானது நாட்டின் அனைத்து பாகங்களிலும் காணக்கிடைக்கிறது. இம்மலர் நடுவே அதிக நெருக்கமான பூவிதழ்களுடன் ஊதா மற்றும் நீல நிறத்தில் காணப்படுகிறது. இம்மலரானது உண்மை, தூய்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றுக்கான சின்னமாகவும் கருதப்படுகிறது.

இலங்கையின் தேசிய மரம்



இலங்கையின் தேசிய மரமாக நாக மரத்தினை பிரகடனப்படுத்துமாறு கையளிக்கப்பட்ட முன்மொழிவு, 1986 பெப்ரவரி 26 ஆந் திகதி அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல நூற்றாண்டுகளாக சமூக மற்றும் கலாச்சார ரீதியாக இலங்கையானது நாக மரத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கீழ்வரும் 7 காரணங்களுக்காக தேசிய மரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:

இலங்கைக்கே உரிய தாவர மரமாகும் ;
  • அதனுடைய பயன்பாட்டுத்தன்மை ;
  • வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ;
  • புறத்தோற்றம் ;
  • பரந்துபட்டத்தன்மை ;
  • நிறம் மற்றும் இயல்பு ;
  • இலகுவாக வரையக்கூடியதன்மை.

இதன் தாவரவியல் பெயர் ‘மெசுஹா நாகசாரியம்’ எனவும், ஆங்கிலத்தில் அயர்ன் வூட் மரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கம்பீரமான அழகு காரணமாக இம்மரம் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்றன. இதன் ஆங்கிலப் பெயரானது அதன் கடினத்தன்மை மற்றும் நீடித்தத்தன்மையைக் குறிப்பிடுவதுடன், கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் கட்டுமானத்தின் போதும் பயன்படுத்தப்படுகிறது

இலங்கையின் தேசிய உணவு  பாற்சோறு


சனத்தொகை: 19 மில்லியன்

 பிறப்பின் போதுஆயுள் எதிர்பார்க்கை: பெண்கள் 74 ஆண்கள் 64.

 எழுத்தறிவு வீதம்: சிங்களம் மற்றும் தமிழ் பின்தங்கிய கிராமங்களைத் தவிர ஆங்கிலமும் பரவலாகப் பேசப்படும் ஒரு மொழியாகும்.


இனக்கலப்பு:

     சிங்களவர்74%,தமிழர்கள்18%,முஸ்லிம்கள்7%,பறங்கியர் (டச்சு மற்றும் போர்த்துக்கேயர்களின் வழித்தோன்றல்கள்) மற்றும் ஏனையவர்கள் 1%.



சமயம்: பௌத்தம் 70%,இந்துமதம்16%,கிறிஸ்தவம்7%,இஸலாம்7%


காலநிலை : தாழ்நிலம்-வெப்பமண்டலம் சராசரி உஷ்ணம் 27 சென்ரிகிரேட்

மத்தியமலை நாடு-குளிர்பிரதேசம் உஷ்ணநிலை 14 சென்ரிகிரேட்டாக குறையும்.இயல்புடையது.தென்மேற்கு பருவகால மழை மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேற்கு,தெற்கு மற்றும் மத்தியப் பிரதேசங்களில் பெய்யும்.வடகிழக்கு பருவ மழை டிசம்பர் ஜனவரி மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்யும்.



தொழிற்துறைகள் இறப்பர்,தேயிலை,தென்னை என்பன பிரதான தொழிற்துறைகள் அத்தோடு விவசாய உற்பத்திகள், ஆடைத்தொழில், சீமேந்து, பெற்றோலியம்சுத்திகரிப்பு, ஜவுளி,புகையிலைத் தொழிற்துறைகளும்.


விவசாய உற்பத்திகள்: 

அரிசி, கரும்பு, தானியங்கள், பருப்புவகைகள், எண்ணைவிதைகள், கிழங்குவகைகள், நறுமணத்திரவியங்கள், தேயிலை, இறப்பர், தென்னை, பால்முட்டை, மிருகத்தோல் மற்றும் இறைச்சிவகைகள்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad