Type Here to Get Search Results !

பூமியின் எடையைக் கண்டுபிடிப்பது எப்படி?

மனிதன் வானத்தை பார்த்து பிரமித்து நின்ற போது அவனது அறிவியல் வேட்கை கொழுந்துவிட தொடங்கியது எனலாம்.

இந்த வேட்கை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்வேறு வியப்பான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.

உதாரணமாக கி.மு276இல் வாழ்ந்த எரடோஸ்தநிஸ்(Eratosthenes) முதன்முதலாக சூரியன் புவியில் ஏற்படுத்தும் நிழலை அடிப்படையாக கொண்டு பூமியின் சுற்றளவை(circumference) மிகத் துல்லியமாக கணக்கிட்டார். இவர்தான் பூமியின் ஆரத்தையும்(earth radius) கணக்கிட்டவர். அவர் பூமியின் ஆரத்தை துல்லியமாக 6.38×10^6மீ என்று கணக்கிட்டார்.

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ புவியீர்ப்பு விசையினால் ஏற்படும் முடுக்கத்தை கணக்கிட்டு கூறினார். ஃ g=9.8m/s^2

அதற்கு அடுத்து சர் ஐசக் நியூட்டன் கோள்களின் ஈர்ப்பு விதியையும்(Newton gravitational law) பொருள்களின் இயக்கம்(laws of motion) பற்றிய மூன்று விதிகளையும் கண்டறிந்தார். நியூட்டனின் இந்த விதிகள் இயற்பியல் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

1798 இல் கேவண்டிஷ் என்பவர் புவியீர்ப்பு மாறிலிக்கான(gravitational constant) மதிப்பை கண்டறிந்தார். (G=6.67×10^-11 Nm^2/kg^2)

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இவற்றை பயன்படுத்திதான் நாம் இப்போது பூமியின் எடையை கணக்கிடப்போகிறோம்.

நியூட்டனின் ஈர்ப்பு விதியின் படி அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றைஒன்று ஈர்க்கும் தன்மையுடையது. அந்த இரு பொருள்களுகிடையான ஈர்ப்பு விசையானது அவற்றின் நிறைகளின் பெருக்கட்பலனுக்கு நேர்தகவிலும் அவற்றுக்கு இடையேயான தொலைவின் இருமடிக்கு எதிர்தகவிலும் இருக்கும்.

மேலும் நியூட்டனின் இரண்டாம் விதி விசையைப்பற்றி குறிப்பிடுகிறது.

F=m×a
நியூட்டனின் இந்த இரண்டு சமன்பாடுகளை கொண்டு பூமியின் எடையை மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்.

புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு பொருளின் மீது புவி ஏற்படுத்தும் விசையை பின்வருமாறு எடுத்துக்கொள்வோம். (நியூட்டனின் ஈர்ப்பு விதியின் படி)


நியூட்டனின் இரண்டு விசைக்கான சமன்பாடுகளையும் சமன் செய்யும்போது நமக்கு புவியின் நிறை கிடைக்கிறது.


ஏற்கனவே தெரிந்த மதிப்புகளை அந்த சமன்பாட்டில் பிரதியிட்டு தீர்க்கும் போது பூமியின் நிறை கிடைக்கிறது.


நியூட்டனின் விதிகளால் தான் நம்மால் புவியின் நிறையை கணக்கிட முடிகிறது.

இதே நியூட்டனின் விதிகளை பயன்படுத்தி பொருட்களுக்கு இடையேயான தூரம் தெரியும் பட்சத்தில் எந்தவொரு பொருளின் நிறையும் கணக்கிட முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad