Type Here to Get Search Results !

பர்மாவில் பிரித்தானிய ஆட்சி

பர்மாவில் பிரித்தானிய ஆட்சி (British rule in Burma) (ஆட்சி காலம்: 1824 - 1948), பர்மாவில் வணிகம் செய்ய வந்த பிரித்தானியர்கள், சிறிது சிறிதாக பர்மாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டே, 1824 - 1886 கால கட்டத்தில் நடந்த மூன்று ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களாலும், பின்னர் பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களும் பர்மாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.

ஆட்சி விரிவாக்கம்

1824-1826இல் நடந்த முதல் ஆங்கிலேய-பர்மியப் போரில், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம் போன்ற பகுதிகளையும், பர்மாவின் அரக்கான் மலைப் பகுதிகளையும் ஆங்கிலேய அரசு கைப்பற்றியது. 

1852-1853இல் நடந்த இரண்டாம் ஆங்கிலேய - பர்மியப் போரில், கீழ் பர்மாவின் பெகு பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இப்போருக்குப் பின் அரண்மனைக் கலவரம் மூண்டதால், பர்மிய அரசர் பாகன் மின் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவரது சகோதரர் மிண்டன் மின்னை பர்மிய அரசனாக்கினர். 

1885 - 1886-இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய - பர்மியப் போரில், தெற்கு பர்மாவை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.

மூன்றாம் ஆங்கிலேய - பர்மியப் போருக்குப் பின்னர் வடக்கு பர்மாவையும் தெற்கு பர்மாவை இணைத்து, 1897 முதல் 1937 முடிய துணைநிலை ஆளுனர் தலைமையில் ஆங்கிலேயர்கள் பர்மாவை ஆண்டனர். பின்னர் இந்திய மற்றும் பர்மாவுக்கான ஆங்கிலேய அரசு செயலர் தலைமையில் பர்மாவில் தனி அலுவலகம் அமைத்து பர்மாவின் அரசு நிர்வாகம், பர்மாவுக்கு விடுதலை கிடைத்த 4 சனவரி 1948 முடிய நடந்தது.

பிரித்தானிய பர்மாவின் ஆட்சிப் பகுதிகள்

1865க்கு பின்னர் நிர்வாக வசதிக்காக அடியிற்கண்டவாறு பிரிக்கப்பட்டது

 01. பிரித்தானியாவின் நேரடி அரசியல் நிர்வாகப் பகுதி

  • டென்னஸ்சேரிம் கோட்டம், டௌஙோ மாவட்டம், தாடொன் மாவட்டம், கைக்கமி, சல்வீன், டாவெய் மாவட்டம் மற்றும் மெர்கூய் மாவட்டம்.
  • அரக்கான் கோட்டம், சிட்வெ மாவட்டம், வடக்கு அரக்கான் மலைப் பகுதிகள், கியாவுக்பை மாவட்டம் மற்றும் தண்ட்வே மாவட்டம்
  • பெகு கோட்டம்; ரங்கூன் நகரம், ஹந்தவாடி, பேகு மாவட்டம், தார்ரவடி மாவட்டம், மற்றும் பியை மாவட்டம்.
  • ஐராவதி கோட்டம்: பதையின் மாவட்டம், ஹிந்தாடா மாவட்டம், தாயெட் மாவட்டம், மா- உபின் மாவட்டம், மௌபிங் மாவட்டம், மையவுங்மையா மாவட்டம் மற்றும் பியப்பூன் மாவட்டம்

02. பட்டியலிட்டப் பகுதிகள் (எல்லைப் பகுதிகள்)
  • ஷான் அரசுகள்
  • சின் மலைகள்
  • கட்சின் அரசுகள்

இந்தியாவிலிருந்து பர்மாவைப் பிரித்தல்

1937ஆம் ஆண்டு முதல், நிர்வாக வசதிக்காக பிரிட்டிஷ் இந்தியாவிருந்து பர்மாவை தனியாக பிரித்து பிரிட்டிஷ் துணைநிலை ஆளுனர் கட்டுப்பாட்டின் கீழ் பர்மாவை பிரித்தானிய இந்திய அரசினர் ஆண்டனர். பிரித்தானிய சட்ட திட்டங்களின் அடிப்படையில், மக்களால் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் பர்மிய நாடளுமன்ற பேரரவை அமைக்கப்பட்டது. பர்மாவின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பா மௌவை 1939ஆம் ஆண்டில் யு ஷா வெளியேற்றி ஆட்சியை கைப்பற்றி, பிரித்தானியர்களால் கைது செய்யப்படும் வரை, 19 சனவரி 1942 முடிய பதவியில் இருந்தார்.

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் 1942இல் பர்மாவை, பிரித்தானியரிடமிருந்து, ஜப்பானிய இராணுவம் கைப்பற்றி 1945ஆம் ஆண்டு வரை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. பர்மா அரசின் தலைநகராக ரங்கூன் நகரம் விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் 1945இல் பிரித்தானிய இராணுவம் மீண்டும் பர்மாவை ஜப்பானிடமிருந்து கைப்பற்றியது.

பர்மிய விடுதலைப் போராட்டம்

பர்மிய பிரித்தானிய அரசுக்கு எதிராக, இராணுவ அதிகாரியும், அரசியல்வாதியுமான ஆங் சான் பர்மாவின் விடுதலைக்கு பாடுபட்டவர். 26 டிசம்பர் 1942இல் பர்மா புரட்சி இராணுவத்தை உருவாக்கியவர். 4 சனவரி 1948 அன்று பர்மா விடுதலை அடைதற்கு அடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் 19 சூலை 1947இல் படுகொலை செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad