2019 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற தேர்தல் ஆகும். இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 சனவரி 9 இல் முடிவடைய இருந்த நிலையில், தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக நடப்பு அரசுத்தலைவர் ஒருவரோ, பிரதமர் ஒருவரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரோ அரசுத்தலைவராகப் போட்டியிடுவதைத் தவிர்த்தனர்.
2019 நவம்பர் 17 இல் அதிகாரபூர்வமான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99% வாக்குகளைப் பெற்றார்.
கோட்டாபய ராசபக்ச இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்கள், மலையகத்தின் நுவரெலியா மாவட்டம் ஆகியவை தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோட்டாபய ராசபக்ச 2019 நவம்பர் 18 அன்று அதிகாரபூர்வமாக இலங்கையின் 7-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
முந்தைய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன [ இலங்கை சுதந்திரக் கட்சி] 17 நவம்பர் - மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது ஆட்சிக்காலம் அதிகாரபூர்வமாக நிறைவு பெற்றது.
வேட்பாளர்
கோட்டாபய ராஜபக்ச [ இலங்கை பொதுசன முன்னணி ] 6,924,255 - 52.25%
சஜித் பிரேமதாச [ ஐக்கிய தேசியக் கட்சி ] 5,564,239 - 41.99%
அனுர குமார திசாநாயக்க [ மக்கள் விடுதலை முன்னணி ] 418,553 - 3.16%
கோட்டாபய ராஜபக்ச [ இலங்கை பொதுசன முன்னணி ] 18 நவம்பர்2019 புதிய அரசுத்தலைவராக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றார்.
8-வது இலங்கை அரசுத்தலைவர்
கோட்டாபய ராஜபக்ச
கோட்டாபய ராசபக்ச நந்தசேன கோட்டாபய ராஜபக்ச; பிறப்பு: 20 சூன் 1949 இலங்கை அரசியல்வாதியும், இராணுவ அதிகாரியும், இலங்கையின் தற்போதைய அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2005 முதல் 2015 வரை இவரது தமையன் மகிந்த ராசபக்சவின் அரசில் பாதுகாப்பு அமைச்சு செயலாளராகப் பணியாற்றி, இலங்கை ஆயுதப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இலங்கையின் தெற்கு மாகாணத்தில் பிரபலமான அரசியல் குடும்பத்தில் பிறந்த கோத்தாபய கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்று, இலங்கை படைத்துறையில் 1971 ஏப்ரலில் இணைந்தார்.
தியத்தலாவை இராணுவப் பயிற்சி மையத்தில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட பின்னர், பல காலாட் படையணிகளில் சேர்ந்து பணியாற்றினார். ஈழப்போரின் ஆரம்பக் கட்டங்களில் கஜபா படையணியில் சேர்ந்து சமர்களில் நேரடியாக ஈடுபட்டார். வடமராட்சி நடவடிக்கை, திரிவித பலயா போன்ற போர் நடவடிக்கைகளிலும், 1987-89 ஜேவிபி புரட்சியின் போது கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர், தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டம் கொண்டார். 1998 இல் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். 2005 இல் இலங்கை திரும்பிய பின்னர், தனது தமையனாரின் அரசில் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடனான போரில் முழுமையாக ஈடுபட்டு 2009 இல் போரை வென்றது. 2006 திசம்பரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் இருந்து தப்பினார்.
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலித் தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டமை போன்ற பல போர்க்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
போருக்குப் பின்னர், கோத்தாபய ராசபக்ச பல நகர அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தார். 2015 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்ச தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசுப் பதவிகளை இழந்தார். 2018 இல், 2019 அரசுத்தலைவர் தேர்தலுக்கு ஒரு முக்கிய வேட்பாளராக வெளிக் கொணரப்பட்டார்.
இத்தேர்தலில் இவர் மகிந்த ராசபக்சவின் தலைமையிலான இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் சிங்கள தேசியவாத, பொருளாதார மேம்பாடு, தேசிய பாதுகாப்பு ஆகிய கொள்கைகளை முன்னெடுத்து, தீவின் சிங்கள வாக்காளர்களின் பெரும் ஆதரவோடு 52.25% வாக்குகள் பெற்று 7-வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக 2019 நவம்பர் 17 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகிந்த ராசபக்ச
பேர்சி மகேந்திரா ராசபக்ச பிறப்பு: 18 நவம்பர் 1945, பொதுவாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa, மகிந்த ராஜபக்ச) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார். முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.
வழக்கறிஞரரான மகிந்தா 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை.
13-வது இலங்கைப் பிரதமர் பதவியில் உள்ளார் பதவியேற்பு 21 நவம்பர் 2019
வாழ்க்கைச் சுருக்கம் பின்னணி
மகிந்த இராசபக்ச அம்பாந்தோட்டையில் வீரக்கெட்டிய என்ற ஊரில் புகழ்பெற்ற அரசியல் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை டி. ஏ. ராசபக்ச தகநாயக்காவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவரது மாமன் டி. எம். ராசபக்ச அம்பாந்தோட்டை தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக 1930களில் பதவி வகித்து வந்தவர்
ஆரம்ப வாழ்வும் கல்வியும்
ராசபக்ச காலி, ரிச்மண்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு, நாளந்தா கல்லூரியிலும், தேர்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1977 நவம்பரில் சட்டவறிஞர் ஆனார்.தங்காலையில் இவர் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்
குடும்பம்
1983 இல் ராசபக்ச சிராந்தி விக்கிரமசிங்கவைத் திருமணம் புரிந்தார். சிராந்தி சிறுவர்-உளவியலாளரும், கல்வியாளரும் ஆவார். சிராந்தியின் தந்தை இலங்கைக் கடற்படையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார்.[10] இவர்களுக்கு நாமல், யோசித்த, ரோகித்த என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். யோசித்த இலங்கைக் கடற்படையில் பணியாற்றியவர்.
மகிந்தவின் சகோதரர் கோத்தாபய ராசபக்ச இலங்கை படைத்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் மகிந்தவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாலராகப் பணியாற்றினார். இன்னும் ஒரு சகோதரர் பசில் ராசபக்ச கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். மகிந்தவின் மூத்த சகோதரர் சாமல் ராசபக்ச நாடாளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றினார்.
கௌரவ விருதுகள்
பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர்.
மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்


