மனுநீதிச்சோழன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்த ஒரு மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.நீதி வழுவாது ஆட்சி செய்து வந்த மன்னனை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர். மனுநீதிச் சோழன் வெகு நாட்களாக மக்கட்பேறு இல்லாமல் வாடினான். இறைவனது அருளால் அழகே உருவான ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மக்களும் மனம் மிக மகிழ்ந்தனர். வீதி விடங்கன் என்னும் பெயரிட்டு அருமையுடன் வளர்த்து வந்தான் மன்னன். வீதிவிடங்கன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அறிவிலும் நற் பண்புகளிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.குறித்த வயதில் மன்னர் அவனுக்கு யானை ஏற்றம் குதிரைஎற்றம் தேர் ஓட்டுதல் வாட்பயிற்சி ஆகிய கலைகளைக் கற்பித்தார். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தான் வீதிவிடங்கன்.
நீதி தவறாத மன்னன் மனுநீதிச் சோழன். நாட்டு மக்கள் மன்னனான தன்னை எந்தவிதத் தடையும் இன்றி நேரில் காணவேண்டும் என்று சிந்தித்தான்.
அதற்காக சபை கூட்டி ஆலோசனை செய்தான். மக்கள் அனைவரும் மகிழும்படி ஒரு காரியம் செய்தான். தன் அரண்மனை வாயிலில் ஒரு பெரிய மணியைக் கட்டி வைத்தான். மன்னனைக் காண விரும்பி வருபவர் யாராயினும் அந்த மணியை அடித்து ஒலி எழுப்பினால் மன்னன் நேரிலே வந்து குறைகளைக் கேட்பார். நேரில் கேட்டுக் குறைகளைக் களைவார்.என்று பறையறைவித்தார். மக்கள் தங்கள் மன்னனின் எளிமை கண்டு மகிழ்ந்ததோடு அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். காட்சிக்கு எளியனாக உள்ள மன்னனை யார்தான் விரும்பமாட்டார்கள்.
ஆண்டுகள் கடந்தன. மனுநீதிச் சோழனால் கட்டப் பட்ட அந்த ஆராய்ச்சி மணியை யாரும் அடிக்கவேயில்லை. மக்கள் எந்தக் குறையும் இன்றி நாட்டில் வாழ்ந்து வந்தனர். காலம் ஒரே மாதிரி செல்லுமா. சோதனை மன்னன் மகன் வீதிவிடங்கன் உருவில் வந்தது.
ஒருநாள் மாலைவேளை வீதிவிடங்கன் உல்லாசமாக தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. உல்லாசத்தின் உச்சியில் இருந்த இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி அங்கேயே அக்கன்றின் அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன். மன்னன் மீதிருந்த அன்பாலும் அவன் மகன் இந்நாட்டின் ஒரே வாரிசு என்ற எண்ணத்தாலும் யாரும் இச்செய்தியை மன்னனுக்குச் சொல்ல விரும்பவில்லை.
மக்கள் சொல்லாவிட்டாலும் அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து அகன்றது. மக்களும் அப்பசுவின் பின் சென்றனர்.அது எங்கு செல்கின்றது என யாருக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் பொருட்டே அதன் பின்னே கூட்டமாகச்சென்றனர். அப்பசு மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது.
அந்தப்புரத்திலிருந்த மன்னன் திடுக்கிட்டான். மந்திரி பிரதானியர் புடைசூழ ஓடிவந்தான் வாயிலுக்கு. ஒரு மனிதனை எதிர்பார்த்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்று இறுமாந்திருந்த மன்னனுக்கு இது பேரிடியாக இருந்தது. என்ன நடந்தது எனக் கேட்டபோது யாரும் எதுவும் பேசாது நின்றனர். மன்னன் அந்தப் பசுவின் பின்னே நடந்து சென்றான். அப்பசு மன்னனைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் நாவால் தான் ஈன்ற கன்றினை நக்கிக் காட்டியது. மன்னன் அக்காட்சியைக் கண்டு கண்கள் கலங்க நின்றான்.
பின் கண்கள் சிவக்க மந்திரியாரைப் பார்த்து "இப்பாவ்த்தைச் செய்தவன் யாவன்? உடனே அவனை என்முன் கொணர்ந்து நிறுத்துங்கள் " எனக் கட்டளையிட்டான். அனைவரும் அமைதியாயிருந்தனர்.
"நீங்கள் கூறாவிட்டால் நீதி தவறிய மன்னனாக நான் ஆவேன். அவ்வாறு நான் உயிர் வாழ விரும்பவில்லை.என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்." என்ற மன்னனைத் தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும்.
என்று முடிவு செய்தான்.
உடனே ஒரு மன்னனாக நின்று சேவகருக்குக் கட்டளையிட்டான். "உடனே தேரைப் பூட்டுங்கள். அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்துங்கள்.அவன் மீது தேரை ஏற்றிக் கொல்லுங்கள். தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்." என்று கூறினான்.ஆனால் அவன் கட்டளையை யாரும் ஏற்க முன்வரவில்லை. வருங்கால மன்னனை நாட்டின் இளவலைக் கொலை செய்ய யாரும் விரும்பவில் லை .
.மனுநீதி தவறாத மாமன்னன் மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டு த தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது. மந்திரி முதலியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.மக்களோ தங்கள் நிலைமறந்து அலறிக் கூக்குரலிட்டனர். எதையும் கவனத்தில் கொள்ளாத சோழமன்னன் தேரை விரைவாகச் செலுத்தினான்.
என்ன அதிசயம்? தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.
விண்ணிலிருந்து ஒரு அசரீரியின் குரல் கேட்டது. "சோழ மன்னா! தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக." என்று வாழ்த்தி மறைந்தது.
மனு நீதி சோழன் சோழ மன்னர்
அத்தியாயம் 1
மனு நீதி சோழன் சோழர் பரம்பரையில் அறியப்பட்ட முன்னோடி அரசர்களுள் ஒருவர். மல்லாளன் என்ற இயற் பெயர் கொண்டு, மனு நீதி சோழ சக்கரவர்த்தி என்று வரலாற்றில் நீங்க இடம் பெற்றவர். இவரது நீதி வழுவா ஆட்சிக்கு இறவா புகழ் சேர்க்கும் விதமாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
இவர் கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 235 ஆண்டுகள் முன்னர் அவதரித்தார். இவரது பெற்றோர் குறித்தோ இவரது இளமைகால வழக்கை குறித்தோ அவ்வளவாக அறியப்படவில்லை. இவரது சகோதரர் எல்லாகன் தமிழக சோழ சாம்ராஜியத்தை உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வருகையில் இவர் இலங்கையை நோக்கி படை திரட்டிக்கொண்டு போனார். அப்போது அவருக்கு வயது 20க்கும் குறைவாகவே இருக்கக்கூடும்.
வட இலங்கையில் அனுராதபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்து வந்த ராஜரத பேரசசை ஆண்டு வந்த அசேலன் என்னும் சிங்கள மன்னனை எல்லாளன் எதிர்கொண்டார். அசேலன் ராஜரத பேரரசை சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்திருந்தான். எவ்வளவோ படைபலம் இருந்தும் அசேலன் படைகள் எல்லாளன் முன் தவிடுபொடி ஆகின.
கடும் போருக்கு பின் எல்லாளன் படைகள் அசேலனை கொன்று எல்லாளன் அனுராதபுரத்தில் சோழ சாம்ராஜியத்தை நிறுவினார். தமிழகத்தில் இருந்து படையெடுத்து சென்று ஆட்சியை கைப்பற்றிய போதிலும் எல்லாளன் சிங்கள மக்களை தன் மக்களாகவே கறுதி நடுநிலையோடு நேர்மை தவறாது ஆட்சிபுரிந்து வந்தார். அவரது ஆட்சிகாலத்தில் வட இலங்கை சீரும் சிறப்புமாக விளங்கியது.
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் அதிகமாக எல்லாளன் இலங்கையின் வட மாகாணங்களை கட்டுக்கோப்பாக ஆண்டு வந்தார். இந்த 70 ஆண்டுகளும் எள்ளலனை ஒரு அந்நிய அரசனாக கருதாமல் மக்கள் தங்கள் சொந்த மன்னனாகவே கறுதி வாழ்ந்தமைக்கு அவரது நீதி வழுவாத மக்கள் உணர்வுகளை மதித்து நடுநிலையோடு ஆட்சி புரியும் திறனே முழுமுதற் காரணமாக அமைந்தது. எல்லாளன் தன் பிரஜைகள் எந்த நேரத்திலும் பயமின்றியும் நீதியை பெறுவதில் எள்ளளவும் தாமதமின்றி பெறவேண்டும் என்பதிலும் மிகவும் கவனமாக இருந்தார்.
மக்கள் எந்த நேரத்திலும் தன்னை அணுக அவரது அரண்மனையின் வாசலில் ஒரு மாபெரும் மனிகூண்டை கட்டி அதில் ஒலி எழுப்ப வசதியாக அதன் முனையில் பெரிய கயிற்றையும் கட்டி தொங்கவிட்டிருந்தார். அதோடு நில்லாமல் அந்த மணியின் அசைவு தனக்கு உடனதியாக தெரியும் விதமாக மணியுடன் இணைத்த இன்னொரு கயிற்றை தனது கட்டிலில் இணைத்திருந்தார் எனவும் ஒரு வரலாறு உள்ளது. நீதிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்த மாமன்னனின் வாழ்வில் அவனது நீதிவழுவமையை சோதிக்க ஒரு கடுமையான சோதனை வந்தது.
மன்னரின் அருந்தவப்புதல்வன் வீதிவிடங்கன் சின்னஞ்சிறு பிள்ளை. அவன் தனது இளம் வயதிலேயே வீர பராக்ரமங்களில் ஈடுபட்டு தலைசிறந்த வீரனாக உருவெடுக்க எண்ணியிருந்தான். அப்படி ஒரு சமயம் அவன் தேரேற்றதில் ஈடுபட்டிருக்கையில் ஆர்வ மிகுதியால் தேரை வீதியில் மிக வேகமாக ஓட்டிச்சென்றான்.
வீதியில் நடமாடிக்கொண்டிருந்தவர்களில் சிலர் அதை ரசித்தும், சிலர் அதை கண்டு அஞ்சியும் விலகிச்சென்றனர். கூடியிருந்த அவனது வயதையொத்த இளம் பிள்ளைகள் 'வேகம்', 'வேகம்' என்று அவனை மேலும் உற்சாகபடுதினர். அந்த வேளையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு ஒரு பசுங்கன்று வழிதவறி ராஜபாட்டையில் வந்துவிட்டது. அதிவேகமாக வந்துகொண்டிருந்த வீதிவிடங்கன் இதை சற்றும் எதிர்பார்கவில்லை. தான் வந்துகொண்டிருந்த தேரை நிருத்தமுற்படுவதற்குள், அந்த பச்சிளங்கன்று தேரின் கால்களில் அகப்பட்டுகொண்டது.
அடி பட்ட வேகத்தில் அந்த கன்று தூக்கி எறியப்பட்டு அதன் அன்னையின் காலடியில் சென்று விழுந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த பசு தன் கண்முன்னே அதன் அருமைக்கன்று துடிதுடித்து இறப்பதை கண்டு கதறி அழுதது. தேரோட்டிவந்த இளங்குமரனும் நொடிப்பொழுதில் நடந்து முடிந்த சம்பவத்தால் செய்வதறியாது திகைத்தான். தான் ஆர்வ மிகுதியால் செய்த காரியம் எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான். தேரை ஓரமாக நிறுத்திவிட்டு கன்று எறியப்பட இடத்தை நோக்கி நடந்தான்.
ஒருவழியாக அந்த தாய் பசுவும் அவன் தேரில் ஏற்றிய கன்றும் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அதன் அருகில் சென்று பார்த்தான். கன்று தன் இன்னுயிரை இழந்து வெற்றுடம்பாய் கிடந்தது. அதன் தாய் அந்த கன்றின் முகத்தில் அழுகையுடன் தனது நாவால் வருடிக்கொண்டிருந்தது.
ராஜகுமாரன் கதறி அழுதான். கன்றை பிரிந்து வாடும் பசுவின் உள்ளக்குமுறலை அவனால் நன்றாக உணரமுடிந்தது. தெரியாமல் தான் செய்த தவறே ஆனாலும் ஒரு உயிரை பலிவாங்கும் அளவுக்கு கொடூர காரியத்தில் ஈடுபட்டதை எண்ணி வேதனையில் வாடி தவித்தான். பசு எழுந்தது. மௌனமாக அங்கிருந்து நடக்க தொடங்கியது. ராஜகுமாரன் அங்கேயே மண்டியிட்டு அமர்ந்தான். கன்றை இழந்த கனத்த இதையதுடன் பசு நகரை நோக்கி நடந்தது. மன்னரின் அரண்மனை முன்பாக வந்து நின்றது. நின்று சிறிது நேரம் அந்த மணிக்கூண்டை உற்று பார்த்துவிட்டு தன் வாயினால் அதன் கையிற்றை பிடித்து இழுத்தது.
நடு சாமத்தில் நீதி மணியோசை கேட்ட மன்னர் திகைத்து எழுந்தார். யாருக்கு என்ன பிரச்சனை நேர்ந்ததோ என்ற குழப்பத்தோடு வெளியில் வந்து பார்த்தார். ஒரு பசு கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தது. அதை கண்ட மன்னர் அந்த பசுவிற்கு எதோ துன்பம் நேர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்தார். உடனே அங்கிருந்த காவலாளிகளிடம் விவரத்தை கேட்டார். யாருக்கும் என்ன நடந்தது, ஏன் இந்த பசு இங்கு வந்து நீதி கேட்கிறது என்று தெரியவில்லை. அனைவர் முகத்திலும் கவலையும் குழப்பமும் குடிகொண்டிருந்தது.
சற்று நேரத்தில் அந்த பசு, தான் வந்த வழியே திரும்ப நடக்கதொடங்கியது. மன்னரும் அதை தொடர்ந்து நடக்கலானார். அவருடன் சில காவலாளிகளும் தொடர்ந்தனர். பசு நேராக அதன் கன்று இறந்துகிடந்த இடத்தை சென்று அடைந்தது. அங்கு வந்து பார்த்த மன்னர் பேரதிர்ச்சி அடைந்தார். ஓரமாய் நின்றிருக்கும் தேர், இறந்து கிடக்கும் கன்று, கண்ணீருடன் ராஜகுமாரன் ஆகிய அனைத்தையும் கண்ட மன்னர், நடந்ததை ஒருவாறு ஊகித்துக்கொண்டார்.
தந்தையை போலவே நேர்மையுள்ளம் படைத்த அந்த சோழ இளங்குமரன் நடந்த விபத்தை முழுவதுமாய் உரைத்தான். மன்னர் மனம் வேதனையில் இதுவரை அறியாத கலக்கத்தை அடைந்தது. வீதிவிடங்கன் காவலாளிகளால் கைது செய்யப்பட்டான்.
மறுநாள் அரசவை கூடியது. மக்கள் எல்லோரும் கூடியிருந்தனர். தெரியாமல் தவறு செய்துவிட்ட அந்த பிள்ளைக்காக மனமுருகினார்.
இதுவரை நீதியே தவறாத மன்னன் இதை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று பெரும் குழப்பத்துடன் பேசிக்கொண்டனர். கன்றை இழந்த பசு அரசவைக்கு கொண்டுவரப்பட்டது. மன்னரின் அருந்தவப்புதல்வனும் அவைக்கு அழைத்து வரப்பட்டான்.
விசாரணை தொடங்கியது. வீதிவிடங்கன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக கூறினான். மன்னர் அவனை மைதானத்தின் மத்தியில் போய் முன்னரே வெட்டி வைத்திருந்த குழியில் இறங்கசொன்னர். மகனும் மறுபேச்சின்றி அவ்வாறே செய்தான்.
சற்று நேரத்தில் அங்கு ஒரு யானை கொண்டு வரப்பட்டது. இதை கண்ட மக்கள் மனதில் சொல்லவொன்னா திகிலும் பீதியும் பற்றிக்கொண்டது. தங்கள் இளவரசனுக்கு யானையின் காலை இடறி மரணிக்கும் மரணதண்டனை விதிக்கபட்டிருக்கிறது என்று உணர்ந்த மக்கள் வேண்டாம் வேண்டாம் என்று அவலக்குரல் எழுப்பினர்.
ஆனால் அந்த நீதி நெறி தவறாத மன்னனும் அவன் தவப்புதல்வனும் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தனர். மகன் சாந்தமே உருவாய் மரணத்தை எதிர்கொண்டான். தந்தை ஆயிரம் சூறாவளிகள் தன் நெஞ்சத்தை சுற்றியாடிக்க சற்றும் அசையாத பாரையென நின்றிருந்தார்.
கரிய இமையம் போல் நடந்து வந்த யானை தன் காலால் அந்த வைர நெஞ்சம் படைத்த இளங்குமரன் தலையை மிதித்து நடந்தது. பசு நீதி கிடைக்கப்பெற்றது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய எல்லாளன் அது முதல் மனு நீதி சோழன் என்று வழங்கப்பட்டார்.
நீதிவழுவமையின் உச்சத்தை நாட்டு மக்களுக்கும் பின்னால் வரப்போகும் பல சரித்திர புகழ் பெற்ற மன்னர்களுக்கு ஒரு வழிகாட்டும் பாடமாகவும் அமைந்தது இந்த சோழ சக்கரவர்த்தியின் வாழ்கை. சிலப்பதிகாரமும் பெரியபுராணமும் இந்த வரலாற்றை அழியா புகழுடையதாய் விளக்கியுள்ளன.
தனது நாட்டு மக்களாலும், ஏன் எதிரி நாட்டு மன்னர்களாலும் இவர் தர்மராஜன் என்று போற்றப்பட்டார். அனைத்து பிரஜைகளையும் சமமாக பாவிதித்து விண்ணோர் போற்றும் ஆட்சி புரிந்த மனுநீதியின் ராஜ்யத்தை புத்தர்களும் போற்றினர்.
இவரது ராஜாங்கத்தை சீண்டிப்பார்க்கவும் யாருக்கும் துணிவில்லாமல் இருதது. 70 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்த இந்த மன்னனுக்கு தனது முதிய பராயத்தில் தூதகாமணி என்ற சிங்கள இளவரசனால் இன்னல் வந்தது. தூதகாமணி , ருஹுமா என்ற இலங்கையின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த சிற்றரசை ஆண்டு வந்த கவன்டிசா என்ற மன்னனின் மகன்.
இந்த இடத்தில் மனுநீதி சோழர் எப்படி தமிழர்களிடையே சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தாரோ அதே போல சிங்கள வம்சத்தில் வந்த தூதகாமணி வரலாற்றை கொஞ்சம் தெரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.
தூதகாமணி --
சிங்கள அரசர்களின் புகழ் பாடும் மகாவம்ச புராணம் தூதகாமணியின் வரலாற்றை பாட 6 அத்தியாயங்கள் வழங்கியுள்ளது. மகாவம்ச புராணம் மொத்தம் 35 அத்தியாயங்கள் கொண்டது. இதிலிருந்தே தூதகாமணி எப்பேர்பட்ட புகழ் வாய்ந்தவன் என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது. நம் இனத்தை அழித்த எதிரி ஆனாலும் அவனை பற்றி அறிந்துகொள்வதில் தவறில்லை.
எல்லாளன் அனுராதபுரத்தை ஆண்டுகொண்டிருக்கும் போது அதனை அடுத்த ருஹுமா என்ற சிற்றரசு இருந்தது. இரண்டுக்கும் நடுவே மகாகங்கை என்று அழைக்கப்பட்ட பெருநதி ஓடியது. ருஹுமா நகரை கவண்டிஸா என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவன் புத்த தருமத்தில் மிகுந்த ஈடுபாடுடையவனாகவும் புத்த மதத்தை மேலும் பரப்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்பவனாகவும் ஆட்சி புரிந்து வந்தான். கல்யாணி என்ற சிற்றரசை ஆண்டு வந்த டிஸ்சா என்ற மன்னனின் மகள் விஹாரமஹாதேவி பின்னாளில் கவண்டிஸா மன்னனை மணந்து காமணி என்ற மகனை ஈன்றெடுத்தல். இவனே தனது ஒழுக்கமற்ற செயல்களால் தூதுகாமணி (தூது எனபது துஷ்ட என்று பொருள் படும்) என்று பெயர் பெற்றான்.
ஒருமுறை கல்யாணி நகரின் மன்னன் டிஸ்சா ஒரு புத்த பிட்சுவினை கொடூரமாக கொன்றான். இதனால் கல்யாணி நகரம் பலமுறை கடலின் சீற்றத்திற்கு ஆளானதாகவும் இது அந்த மன்னனுக்கு புத்தபிட்சு வழங்கிய சாபம் என்றும் நம்பப்பட்டது. இப்படியே தொடர்ந்தால் ஒருநாள் கடல் கல்யாணி நகரை முழுமையாக கொண்டுபோய்விடும் என்றும் மக்கள் அனைவரும் மூழ்கி சாகநேரிடும் என்றும் அவரது அமைச்சர்கள் ஆலோசனை கூறினர். மேலும் கடல் ராஜனை குளிர்வித்து நகரையும் மக்களையும் காக்க ராஜவம்சத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடலுக்கு பலியிடவேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால், குழப்பமடைந்த மன்னன், இறுதியில் தனது மகளையே பலிகொடுக்க முடிவுசெய்தான்.
ஒரு தங்க படகில் தனது மகளை வைத்து அதில் நிறைய பொன்னும் பொருளும் ஆபரணங்களும் வைத்து, 'மன்னன் மகள்' என்று எழுதி கடலுக்குள் அனுப்பினான்.
கடலில் மூழ்கி பலியாவல் என்று நினைத்த அரசிளங்குமரி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி ருஹுமா கரையை வது அடைந்தாள். பின்னர் அந்நாட்டு மன்னன் கவண்டிஸாவை மணந்து ராணியானால்.
விஹாரமஹாதேவி கர்பமுற்றிருந்த காலத்தில் அவளுக்கு வினோதமான பல ஆசைகள் ஏற்பட்டன. இவை பெரும்பாலும் தீய எண்ணங்களாகவே இருந்தன. கர்பகாலத்தில் தேனீக்களாலும் தேன்கூட்டினாலும் செய்த தலையணையில் உறங்க ஆவல் கொண்டால். எல்லாளனின் தலையை வெட்டி அந்த வாளை கழுவிய நீரை அருந்த ஆசைபட்டால். அதுவும் எல்லாளன் தலைமீது ஏறிநின்று அதை அருந்த ஆவல்கொண்டால். இதையெல்லாம் கேட்ட அவையிலிருந்த குரிகூருவோர் அவளுக்கு பிறக்கப்போகும் மகன் நிச்சயம் தங்கள் நாட்டில் ஊடுருவி ஆட்சி புரியும் தமிழ் மண்ணை வென்று இலங்கையில் ஸ்திரமான பெரிய ராஜாங்கத்தை உருவாக்குவான் என கட்டியம் கூறினர். ராணி சில மாதங்களின் தாமணி என்ற ஆண் பிள்ளையை ஈன்றால். சில வருடங்கள் கழித்து டிஸ்சா என்ற மகனையும் பெற்றால்.
தாமணி பிறந்தபோது ஆறு துதிக்கைகள் கொண்ட யானை ஒன்று தன் குட்டியுடன் வந்து அதை அரசவையில் விட்டுவிட்டு சென்றது. அந்த குட்டி யானை குண்டலா என்று பெயரிடப்பட்டு தாமணியுடன் வளர்க்கப்பட்டது. பின்னாளில் குண்டலா தாமனியின் பட்டத்து யானையாக அவனுக்கு பெரும் துணையாக இருந்தது.
பிறந்தது முதலே அவனது தாய் அவனுக்கு எல்லாளனை வெல்லவேண்டும், அவர் ஒடுக்கிய ராஜரத பேரரசை மீட்டெடுக்கவேண்டும் என்ற என்னத்தை தீயை வளர்த்துவந்தாள். தாமணி இளம் வயதில் கடும் முரடனாகவும், வீரனாகவும், அறிவுக்கூர்மை வாய்ந்தவனாகவும் விளங்கினான். அவன் எல்லாளனின் படைபலத்தையும் பெரும் சைன்யத்தையும் கண்டு அஞ்சவில்லை.
இவன் இளவரசனானதும் எப்படியாவது எல்லாளனை வென்று அனுராதபுரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தான். ஆனால் அவனது தந்தை இதற்கு இணங்க மறுத்தார். பெரும் பலத்தோடு ஆட்சிபுரியும் எல்லாளனை எதிர்ப்பது தமது ஆட்சிக்கே பங்கமாக முடியும் என்று அஞ்சினார். தனது ராஜ்யத்தை விரிவுபடுத்தும் எண்ணமும் ஆசையும் அவருக்கு இருந்தாலும் தகுந்த படைபலம் இல்லாமல் எல்லாளனை மோதுவது அறிவின்மை என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.
ஆனால் அவரது மகனோ இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப தந்து தந்தையை 'நீ ஒரு ஆணாக இருந்தால் இப்படி சொல்லமாட்டாய்' என்று பரிகசித்தான். அத்தோடு நில்லாமல் பெண்கள் அணியும் ஆபரணங்களையும் அவருக்கு பரிசாக அனுப்பினான்.
இதைக்கண்டு வெகுண்டெழுந்த கவன்டிசா தனது மகனுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட எண்ணினார். படைதிரட்டி போருக்கு தயாராக இருந்த தனது மகன் தாமணியையும் அவனது நண்பர்களையும் சிறைபிடித்தார். அவன் செய்ய துணிந்தது எத்துனை பெரிய தவறு என்பதையும் விளக்கிக்கூறினார்.
எல்லாளனை எதிர்க்கவேண்டும் என்றால் முதலில் இருக்கும் ராஜ்ஜியத்தை பலப்படுத்த வேண்டும். ராஜாங்க கருவூலம் செழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கு நாட்டில் விளைச்சலையும் வலிமையையும் பெருக்கவேண்டும். இதையெல்லாம் செய்தபிறகே எல்லாளனை எதிர்ப்பதை பற்றி நினைத்து பார்க்கவும் முடியும் என்று கூறி அதை செயல்படுத்தவும் செய்தார். அதுவரை தனது மகனை அமைதி காக்க சொன்னார். இந்த ஏற்பாட்டின் ஒரு படியாக நாட்டில் நிறைய பலம் வாய்ந்த உடற்கட்டு கொண்டவர்களையும் பைல்வாங்களையும் கடும் பயிற்சி செய்ய வைத்து போருக்கு தயார் செய்தார். இதற்கிடையே தாமணிக்கும் அவனது தம்பி டிஸ்சாவுக்கும் அடிக்கடி ராஜ்ய பாரத்தை ஏற்பதில் சண்டை மூண்டது. இருவரும் தந்தைக்குப்பின் அரசனாக எண்ணினர்.
தாமணியின் செயல்களால் அவன் மீது கோபம் கொண்டிருந்த அவன் தந்தை டிஸ்சாவுக்கு பல சலுகைகள் வழங்கினார். இதனால் டிஸ்சா தாமணியின் யானை உட்பட அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். இதனால் மன்னரின் மரணத்திற்கு பின்பு தாமணி தன் தம்பியுடன் யுத்தம் செய்யவேண்டியதாயிற்று.
போரில் தாமணி தோல்வியடைந்து தன்னுடைய ஆயிரக்கணக்கான ஆதரவலர்களையும் இழந்தான். இதனால் தாமணி புறமுதுகிட்டு தப்பியோட நேர்ந்தது. தப்பி ஓடிய தாமணி மகாகாமா என்ற நாட்டில் தஞ்சம் புகுந்தான். சிலநாட்களில் அங்கேயே ஒரு படையை திரட்டிக்கொண்டு தனது தம்பியுடன் மீண்டும் போரிட்டான். டிஸ்சா தன் அண்ணனிடமிருந்து கைப்பற்றிய பட்டத்து யானை குண்டலாவின் மீதும் தாமணி ஒரு பெண் குதிரையின் மீதும் ஏறி போர் புரிந்தனர்.
தனது யானை மேல் வரும் டிஸ்சாவை பார்த்ததும் தாமணிக்கு ஒரு உத்தி தோன்றியது. தனது அன்பிற்குரிய யானை தன்னை எதிர்க்க ஒருபோதும் துணியாது என்று அவன் நம்பினான். எனவே எதிரே வருவது தன் எஜமானன் என்று தெரிந்தால் யானை நிச்சயம் தனக்கு உதவும் என்று எண்ணினான். எனவே குதிரைமீது இருந்தவாறு யானையின் கண்ணில் படும்படி அதனருகே தாவிக்குதிதான். யானை அவனை கண்டுகொண்டது. அவன் எதிர்பார்த்தபடியே யானை தன் விசுவாசத்தை காட்டதொடங்கியது.
டிஸ்சா எதிர்பார்க்காத நேரத்தில் அவனை தன் முதுகில் இருந்து தூக்கி அடித்தது. யானைமீதிருந்து தூக்கியெறியப்பட்ட டிஸ்சா kattu மரங்களினூடே சென்று விழுந்தான். தாமணி வெற்றி பெற்றான். டிஸ்சா போர்களத்திலிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்துக்கொண்டான். சிலவருடங்கள் கழித்து டிஸ்சா தன் அண்ணனிடம் திரும்பி வந்து மண்ணிப்பு கோரவே தாமணி அவனை மண்ணித்து அரசவையில் மந்திரியாக்கினான்.

