Type Here to Get Search Results !

சமூக நுண்ணறிவு


1920 ஆம் ஆண்டில் இ. எல். தார்ண்டைக் நுண்ணறிவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தினார்.

கருத்தியல் நுண்ணறிவு, பொறியியல் நுண்ணறிவு, மற்றும் சமூக நுண்ணறிவு. சமூக நுண்ணறிவு (social intelligence) என்பது மனித உறவுகளைச் செம்மைப்படுத்துதலைக் குறிக்கிறது.

மனிதர்கள் தம் உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தி உறவுகளை மேம்படுத்துவதற்கு சமூக நுண்ணறிவு துணை புரிகிறது. தார்ண்டைக்கின் சமூக நுண்ணறிவுப் பற்றிய கோட்பாட்டினைப் பயன்படுத்தி 1983 இல் ஜவார்டு கார்டனர் பன்முனை நுண்ணறிவு கோட்பாட்டினை வெளியிட்டார்.

இதில் தன் நுண்ணறிவு பிறர்சார் நுண்ணறிவு அடங்கும். பிறர்சார் நுண்ணறிவு என்பது நம் உணர்வுகளைப் பற்றி புரிந்து கொண்டு, பிறரை அனுசரித்து வாழ்க்கையினை திறம்பட நடத்தும் திறனைக் குறிக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad