Type Here to Get Search Results !

அன்றைய சிலோனும் இன்றைய ஸ்ரீலங்காவும்

அன்றைய சிலோனும் இன்றைய ஸ்ரீலங்காவும்

இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கு மேல் மக்கள் வாழும் ஒரு அழகிய தீவான இலங்கை ஆரம்ப காலம் தொட்டே தனக்கென நீண்டதொரு வரலாறு கொண்டுள்ள நாடு என்பது நாம் அறிந்ததே. சிலோன் என்று அறியப்பட்டிருந்த நாள் முதல் இன்றைய ஸ்ரீலங்கா வரையிலும் ஏதோ ஒரு சம்பவங்களால் உலகில் உள்ளவர்கள் இலங்கை பற்றி பேசிய வண்ணமே உள்ளனர். இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. 

இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான துறைமுகம் என்பன புராதன காலந்தொட்டு இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. 

சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாக இருந்து வருகின்றது.

ஆங்கிலேயர், ஒல்லாந்தர் , பிரித்தானியர் என பலர் ஆட்சி செய்த அப்போதைய "சிலோன்" எனும் இப்போதைய ஸ்ரீலங்காவில் அவர்காலத்து கட்டிடங்களும் நினைவு சின்னங்களும் ஏராளம். அது மட்டுமன்றி இலங்கையில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்தம் கூட அதிக நினைவு சின்னங்களை விட்டுச்சென்றுள்ளது. அப்போதைய காலங்களில் சிலோன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த இலங்கை 1972-ம் ஆண்டு மே 22 ல் திகதி ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றப்பட்டது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad