யாழ்ப்பாண பாரம்பரிய பண்பாடு
யாழ்ப்பாணம் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியத்தை உடையதுடன் தனித்துவமானவையாகவும்காணப்படுகிறது.
அவையாவன மொழி,மதம்,சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள்,நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை,மடம் ,சுமைதாங்கி, ஆவுரஞ்சி ,ஆலயங்கள் போன்றனவாகும்.
யாழ்ப்பாணம் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியத்தை உடையதுடன் தனித்துவமானவையாகவும்காணப்படுகிறது.அவையாவன மொழி,மதம்,சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள்,நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை,மடம் ,சுமைதாங்கி, ஆவுரஞ்சி ,ஆலயங்கள் போன்றனவாகும்.
யாழ்ப்பாண மொழி
யாழ்ப்பாணத்தில் காணப்படும் தமிழ் மொழி ஏனைய மொழிக் கலப்புக்கள் குறைந்த தூய மொழியாக காணப்படுகிறது. சங்ககாலந் தொட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி பயன்பாட்டில் காணப்படுகிறது. ஏனைய பிரதேசங்களை விட பேச்சு வழக்கிலும் எழுத்தாக்கங்களிலும் தூய தமிழே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
யாழ்ப்பாண மதம்
இந்து மதம் இப்பிரதேசத்தில் தனித்துவமான வகையில் வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. ஆரம்பகாலங்களில் இயற்கை வழிபாட்டோடு இணைந்த வகையில் பல மதம் சார் சடங்குகள் இடம் பெற்றதுடன் சில பிரதேசங்களில் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. வரலாற்று பெருமை மிக்க நகுலேஸ்வரம் சந்நிதி நல்லூர் முதலிய ஆலயங்களுடன் வைஸ்ணவ ஆலயமான வல்லிபுரமும் சிறப்பான ஆலயமாக காணப்படுகிறது. அத்துடன் காவடி பாற்செம்பு தீமிதித்தல் முதலிய பல்வேறுபட்ட சடங்குகளும் மதத்துடன் இணைந்த வகையில் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண சடங்குகளும் சம்பிரதாயங்களும்
யாழ்ப்பாண பண்பாட்டில் ஓர் மனித பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் இணைந்த வகையிலேயே காணப்படுகிறது. உதாரணமாக காதுகுத்தல் சோறூட்டுதல் திருமணம் என பல்வேறுபட்ட சடங்குகள் காணப்படுகிறது.
அத்துடன் சமய நம்பிக்கையான குழந்தையினை விற்றுவாங்குதல் முதலிய பல சடங்கு முறைகள் அன்று தொட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளன. அத்துடன் விழாக்கள் என்ற வகையில் ,தைப்பொங்கல் ,கார்த்திகை விளக்கீடு, சித்திராப்பௌர்ணமி,தீபாவளிபோன்ற பல விழாக்களும் மக்கள் வாழ்வோடு இணைந்து காணப்படுகின்றது. இவ் விழாக்களோடு இணைந்த வகையில் ஊஞ்சல் போர்த்தேங்காய் அடித்தல் கிளித்தட்டு முதலிய பல விளையாட்டுக்கள் மக்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்து காணப்படுகிறது.
யாழ்ப்பாண விவசாயம்
யாழ்ப்பாண மக்களது முக்கிய தொழிலாக மழை கிணற்று நீரினை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் காணப்படுகிறது. பாரம்பரியமாக நெற்செய்கை வெங்காயம் புகையிலை மிளகாய் மற்றும் காய்கறிகளே பெருமளவுக்கு பயிரிடப்படுகின்றன. இவ் தொழில் முறையில் உழுதல் சூடடித்தல் புகையிலையை பதனிடுதல் பொருட்களை பழுதடையாது நீண்ட நேரம் பாதுகாத்தல் என்பவற்றுக்கு பல்வேறுபட்ட நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதேச மக்களது தனித்துவமான உணவுகளாக நெல் அரிசிச்சோறு ஒடியற்கூழ் பிட்டு கொழுக்கட்டை பனை பதார்த்தங்கள் என்பன காணப்படுகின்றன
தொழில்நுட்பமுறைகள்
ஆரம்பகாலந்தொட்டு வேலையினை இலகுவாக்கும் வகையில் பல்வேறுபட்ட தொழில்நுட்பங்கள் உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக நீர் ஊற்றுதல் எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தல் மா அரைத்தல் போன்றவற்றிற்கு எளிய வகையிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டுப்புற இலக்கியங்கள்
பாமரமக்களால் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலான இலகுவான மொழி நடையிலான பாடல்கள் நாடகங்கள் இலக்கியங்கள் என்பன பரம்பரை பரம்பரையாக செவிவழியாகப் பேணப்பட்டு வந்துள்ளன.

கட்டிட அமைப்பு முறை
மடம்
யாழ்ப்பாண மக்களது பாரம்பரிய கட்டிடக் கலை அம்சங்களில் மடம் முக்கியமானதாகும். எமது பண்பாட்டில் மடங்களின் தோற்றம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
ஆரம்ப காலத்தில் சன்னியாசிகளும் துறவிகளும் தங்குவதற்காக அமைக்கப்பட்ட மடங்கள் வர்த்தக விருத்தியின் விளைவாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தமது களைப்பினை நீக்கி பாதுகாப்பாக பொருட்களை வைத்து ஓய்வு பெறும் இடங்களாக மாற்றம் பெற்றன.
கி.பி 1ம் நூற்றாண்டு அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டு மூலம் வட இலங்கைப் பரப்பில் பல மடங்கள் காணப்பட்டதனை அறிய முடிகிறது.
ஐரோப்பியர் காலத்திற்கு முற்பட்ட மடங்களினது எச்சங்கள் கண்டறியப்படாமைக்குரிய காரணங்களாக ஆரம்ப காலத்தில் நிழல்தரு பாரிய மரங்களும் அதனைத் தொடர்ந்து அழியக்கூடிய பொருட்களால் உருவாக்கப்பட்ட மடங்களுமே காரணமாகும்.
சுமைதாங்கி
நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தமது பொருட்களை இறக்கி களைப்பாறும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஓர் அம்சமே இதுவாகும். சம்பிரதாய ரீதியாக ஓர் தாய் குழந்தையினை பிரசவிக்காமல் இறக்கும் பட்சத்தில் அவரது பாரம் குறையும் நோக்கில் ஆத்ம சாந்தி அடைய வேண்டி இவ் அமைப்பு உருவாக்கப்படுவது சம்பிரதாயம் ஆகும்.
தொண்டமனாற்றுப் பகுதியில் இன்றும் இறந்தவரது நினைவு நாளில் பூசை செய்து வழிபடுவதனைக் காணக்கூடியதாக உள்ளது.
ஆவுரஞ்சி
நீரினை அருந்தும் கால்நடைகளுக்கு ஏற்படும் திணைவு எனும் கடியினையே நீக்கும் முகமாக உருவாக்கப்பட்ட நீண்ட கல்லினையே இது குறிக்கும். பெரும்பாலும் இவ் 3 அம்சங்களும் ஒன்றாகவே காணப்படுகிறது. அத்துடன் நீர்நிலையும் காணப்படுவது வழமை.
யாழ்ப்பாண ஆலயங்கள்
யாழ்ப்பாணப் பாரம்பரிய மக்களது மதமாக இந்துமதமே பெருமளவு காணப்படுகிறது. ஆரம்பகாலங்களில் இயற்கைத் தெய்வங்களினை இயற்கையாக அமைந்து காணப்படும் மர நிழல்கள் சிறிய கட்டிடங்கள் என்பவற்றில் வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. இவ் வழிபாட்டில் மடை பரவுதல் முதலிய பல சடங்குகள் ஒன்றிணைந்து காணப்பட்டிருந்தன.
கால ஓட்டத்தில் தென்னிந்திய திராவிடக் கலையின் செல்வாக்கு காரணமாக நிரந்தரமான கட்டுமானங்களை உடைய பல கோயில்கள் தோற்றம் பெற்றது.
இவை பிரதேசத்தில் கிடைக்கும் சுண்ணாம்பு முருகைக் கற்களைப் பயன்படுத்தி தென்னிந்தியக் கலைப்பாணியில் அமைக்கப்பட்டிருந்தது.
ஊதாரணமாக மாவிட்டபுரம் நகுலேஸ்வரம் நல்லூர் வல்லிபுரம் முதலிய ஆலயங்களைக் குறிப்பிடலாம.; போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட 500 ஆலயங்களை அழித்துப் பெறப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு கோட்டைகளை அமைத்தாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றது.
அத்தடன் பௌத்த மதம் சார்ந்த வழிபாட்டிடங்களும் இஸ்லாமிய சான்றாதாரங்களும் யாழ்ப்பாணப் பண்பாட்டோடு இணைந்த வகையிலே காணப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் என்ற இடப்பெயர் வழக்கின் பரிணாமத்தினை எடுத்தாராய்வதற்குப் போதிய சான்றுகள் கிடைத்திருக்காத போதும் வரலாற்று ஆசிரியர்கள் தத்தமது வரலாற்று கற்பனா வாதத்திற்கேற்ப விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
கி.பி 17 ஆம் நூற்றாண்டிற்குரிய திருமாணிக்குழிக் கல்வெட்டொன்றிலே தென்னிந்தியாவில் யாழ்ப்பாணம் என்ற இடப்பெயர் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இலங்கையில் எவ்விடத்திலேனும் யாழ்ப்பாணம் என்ற சொல்லாட்சி கல்வெட்டுக்களில் பொறித்திருக்கக் காணப்படவில்லை. அருணகிரிநாதரின் திருப்புகழில் “யாழ்ப்பாணாயன் பட்டிணமேவிய பெருமாளே” எனக் குறிப்பிட்டுள்ளமையை காணக் கூடியதாக உள்ளது.
ஒல்லாந்தர் காலத்துத் தோம்புப் பதிவிலேயே “யாழ்ப்பாணாயன் பட்டிணம்” குறிப்பிடத்தக்கமையை நோக்கத்தக்கது. அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் கி.பி 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டாரம்பம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப்புலவர் “யாழ்பாடி” உடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ள கதை மரபின் அடியாக யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறென எடுத்துக் காட்டியுள்ளார்.
“அந்தகக்கவி” என்று அழைக்கப்பட்ட வீரராகவன் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தனது யாழ் வாசிக்கும் திறமையால் மன்னரிடமிருந்து வடபகுதியிலுள்ள மணற்றிடறை பரிசாகப்பெற்று யாழ்ப்பாணம் என்ற பெயரையும் இட்டு தன்குடிகளை வருவித்து ஆட்சி நடத்தினான் என மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் ஐதீகம் நீண்டுசெல்கின்றது.
இன்றைய யாழ் நகரத்தின் மையத்தில் “ஐநூற்றுவன் வளவு” என்ற ஒரு குறிச்சி காணப்படுகின்றது. தோம்பில் குறிப்பிடப்பட்ட ஐநூற்றுவன் வளவு இன்றைய யாழ் வைத்தியசாலைக்குத் தெற்குப்பக்கமாக உள்ள வர்த்தக நிலையங்கள், மணிக்கூட்டுக் கோபுரம், நூலகப்பரப்பு மற்றும் யாழ்.கோட்டை வரைக்கும் பரந்து காணப்படுகின்றது. ஜாவகன் பட்டினம் சாவகச்சேரி என மாற்றமடைந்தது போன்றே ஐநூற்றுவன் வளவு ஐநூற்றுவன் பட்டினமாகி, ஜாழ்ப்பாண பட்டினம் என மருவி இன்று யாழ்ப்ப(h)ணம் என வழங்குகின்றது எனலாம்.
கி.பி 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழமண்டலத்திலிருந்து படையெடுத்து வந்த முதலாம் பரா-அந்தகச் சோழன் (பராந்தகன்) யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதனையும் தனது அரசியல் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்த செய்தியை “மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரியான” என்ற அம்மன்னனது விருது உறுதிப்படுத்துகின்றது. பார் ஆளும் அந்தகச்சோழனையே “யாழ்ப்பாண வைபவமாலையார்” அந்தகக் கவி வீரராகவன்” என்ற புனைப்பெயரில் வழங்கிய கதை மரபில் இணைத்துக் கூறியிருக் வேண்டும் எனத் தோன்றுகின்றது.
அந்தகன் என்ற ஒரு பெயர் வழியுடனோ அல்லது அரசியல் தலைமைத்துவத்திற்குரிய தலைவனுடனோ தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வழக்கு உருவாகியிருக்க வேண்டும். அவ்வாறாயின் முதலாம் பராந்தகச்சோழனது பணி யாழ்ப்பாணப் பண்பாட்டுத் தோற்றத்துடன் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
அவ்வாறாயின் யாழ்ப்பாண வைபவமாலையார் குறிப்பிட்டுள்ள
“அந்தகன்” யார்?
முதலாம் பராந்தகனா?
யாழ்ப்பாணத்திற்கும் பராந்தகனுக்கும் இடையிலான தொடர்புகள் யாவை? இவ்வினாக்கள் வரலாற்றாசிரியர்களுக்கே சமர்ப்பணம்.