Type Here to Get Search Results !

உற்பத்தித்திறன் பவர்ஹவுஸ் Huawei MateBook X Pro 2021 இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது


முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, புதிதாக மேம்படுத்தப்பட்ட Huawei MateBook X Pro 2021 ஐ இலங்கையில் முழு அளவிலான மேம்பட்ட அம்சங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நேர்த்தியான தோற்றமுடைய, உன்னதமான மடிக்கணினி சிறந்த செயல்திறன், அனைத்து சூழ்நிலை நுண்ணறிவு மற்றும் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


புதிய MateBook X Proவின் முக்கிய பண்புகள் திகைப்பூட்டும் FullView display, பிரமிக்க வைக்கும் தோற்றம், ultra-portabilityமற்றும் நாள் முழுவதுமான பெட்டரி ஆயுள். இது 13.9 inches FullView display, 3K உயர் வரையறை படத் தரத்துடன் அதிவேகமாக பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது. 1.33 கிலோகிராம் மற்றும் 14.6 மி.மீ கனதி கொண்ட MateBook X Proஎன்பது ஒவ்வொரு தொழில் வல்லுனரும் தேடும் மடிக்கணினியாகும்.


செயல்திறனைப் பொறுத்தவரை, அதன் 11 ஆவது Gen Intel Core செயலி மற்றும் 16 GB LPDDR4x மெமரி ஆகியவை சிறந்த செயல்திறனை வழங்குகின்றன, இது தினசரி நோக்கங்களுக்காக, கேமிங் அல்லது வீடியோ எடிட்டிங் போன்ற தொழில்முறை பணிகளுக்காக இருக்கலாம். Huawei Free Touch –ஒவ்வொரு தொடுதலுடனும் மென்மையான பின்னூட்டங்களை வழங்கும் டச் பேட், சைகைகளுடன் கூடிய உயர் துல்லிய மல்டி-பாயிண்ட் டச் ஸ்கிரீன், dual edge microphones மற்றும் quad ஸ்பீக்கர்கள் போன்றன தொழில்நுட்ப ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும்.


Huawei யின் இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியு கூறுகையில், “கடந்த சில வருடங்களாக மடிக்கணினி பிரிவில் Huawei முன்னேறிச் சென்றுள்ளதுடன் மேம்பட்ட அம்சங்களுடன் தொழில்முறை நிலை மடிக்கணினிகளை வழங்குகிறது. MateBook தொடரானது மடிக்கணினி பிரிவில் பெரும்பாலான வெற்றிகளைக் கொண்டுள்ளது, அதே போன்று ஏராளமான பயனர்கள் ஏற்கனவே MateBook தொடரை ஏற்றுக்கொண்டனர். Huawei MateBook X Pro 2021 பதிப்பு அதன் அனைத்து அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்கிறது. நீங்கள் நேர்த்தியான மற்றும் கச்சிதமான இன்னும் சக்திவாய்ந்த மடிக்கணினியை தேடும் ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தால், 2021 ஆம் ஆண்டிற்கான இந்த வணிக முதன்மை அறிமுகத்திற்காக காத்திருங்கள்.


Huawei MateBook X Pro ஆனது 56Wh பேட்டரி மற்றும் Huawei இன் சிறந்த சக்தி மேலாண்மை அமைப்புடன் நீடித்த செயல்திறனை வழங்குகிறது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில், இது ஒரு கைரேகை ஆற்றல் பொத்தானைக் கொண்டுள்ளதுடன் பாவனையாளர்களை இலகுவான முறையில் இயக்கி நோட்புக்கில் உள்நுழைய அனுமதிக்கிறது.


Huaweiஷேர் என்பது Huawei MateBook X Pro பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது பயனாளிகளை மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போனை தடையின்றி இணைக்கவும் அதிக அளவிலான நுண்ணறிவை அனுபவிக்கவும் அதேபோன்று மிகவும் சுவாரஸ்யமான அனுபவங்களை உருவாக்கவும் அனுமதிக்கிறது. Huaweiஷேரில் உள்ள மல்டி ஸ்கிரீன் ஒத்துழைப்பு அம்சம் பயனரை மடிக்கணினியில் ஸ்மார்ட்போன் திரை பிரதிபலிக்கவும் ஒரே நேரத்தில் வேலை செய்யவும் உதவுகிறது. பயனர் ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினியை ஒரே கிளிக்கில் இணைக்க முடியும்.


புதிய Huawei MateBook X Pro, Emerald Green நிறத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது, இது இலங்கையில் அனைத்து Huawei மையங்கள், சிங்கர் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட மறு விற்பனையாளர்கள், Daraz.lk மற்றும் Singer.lk போன்ற இ-காமர்ஸ் தளங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad