அரசதுறையில் சேர்க்கப்பட்டுள்ள 60ஆயிரம் பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6மாதம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்பிரகாரம் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை அங்கிகரித்து சம்பந்ததப்பட்ட நிறுவனங்களுக்கு குறித்த பட்டதாரிகளை நியமிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதல் கேட்கப்படும்.
இப்பயிற்சியாளர்களில் 18ஆயிரம் பட்டதாரிகளை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறித்த பட்டதாரிகளின் நியமானமானது இம்மாதத்துடன் முடிவடையவுள்ளது. அத்துடன் இவர்களுக்கான கொடுப்பனவாக 20ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.