Type Here to Get Search Results !

பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்

ஜிப்சீஸ் (Gypsies) இசைக்குழுவின் தலைவரும் பிரபல சிங்கள மொழி பாடகருமான சுனில் பெரேரா காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 

 இலங்கையின் சிங்கள இசைக்குழுக்களின் முன்னோடியாக சுனில் பெரேரா திகழ்ந்தார். சிங்கள மொழி இசைத்துறையில் சிறந்த பாடகராகவும் கிட்டார் வாசிப்பாளராகவும் திகழ்ந்ததுடன், பாடலாசிரியராகவும் அவர் மிளிர்ந்தார்.

 ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவரான சுனில் பெரேரா , குழு இசையினூடாக சர்வதேச அரங்கில் அறியப்பட்டு, இலங்கையின் நாமத்தை உலகறிய செய்தவராவார். 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி சுனில் பெரேரா பிறந்தார். 

 சமூக அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடிய அன்னார், தனது பாடல்களூடாக சமூக விழிப்புணர்விற்கான விடயங்களை முன்வைத்தார். பிட்டி கொட்டபங் நோனா, கொத்தமல்லி, மகே நேர்ஸ் நோனா உள்ளிட்ட பாடல்களூடாக சிங்களவர்கள் மத்தியில் மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தவரே சுனில் பெரேரா.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad